கோமல் இரா.க.அன்பரசன்
எழுத்தாளர் – ஊடகவியல் ஆலோசகர் – சமூக செயற்பாட்டாளர் என்ற தளங்களில் இயங்குபவர். அரசியல், வரலாறு, வாழ்வியல், ஊடகவியல் துறைகளில் 18 நூல்களை எழுதியிருக்கும் விருது பெற்ற எழுத்தாளர். அனைத்து முன்னணி நாளிதழ்களின் தலையங்கப் பக்கங்களில் தொடர்ந்து எழுதி வருபவர். மாணவப்பத்திரிகையாளராக தொடங்கி தொலைக்காட்சி ஊடகங்களில் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட உச்சப் பதவிகளை மிக இளம் வயதிலேயே வகித்தவர். நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களை உருவாக்கியதோடு, தமிழ் தொலைக்காட்சி ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தவர். எழுத்து, ஊடகம் தாண்டி தீவிர சமூகச் செயற்பாட்டாளராக இயங்கி வருபவர். ஏராளமான இளைஞர்களோடு டெல்டா மாவட்டங்களில் இயங்கும் ‘காவிரி’ அமைப்பின் நிறுவனர். வசதியற்ற கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்கு 100% உதவித்தொகை வழங்கும் சென்னை ஆனந்தம் அமைப்பின் அறங்காவலர். சொந்த ஊரான மயிலாடுதுறையின் முன்னேற்றத்திற்கான பல்வேறு சேவை அமைப்புகளுடன் இணைந்து ‘மாயூர யுத்தம்’ இயக்கத்தை நடத்துபவர்.