கோமல் சிந்தனைத் துளிகள்

  • வாழ்தல், வாழ்வித்தல் வல்லமை!

 

  • நீ  நினைத்ததை அடைய ஆசைப்பட்டால் முதலில் அவமானப்பட   ஆசைப்படு!  ஏனெனில் அதுதான் அத்தனை சாதனைகளுக்கும் அடித்தளம்!

 

  • வாசிப்பை நேசிப்பவர்களுக்கே உலகம் வசப்படும்….
    வாசிப்போம் – புத்தகங்களைச் சுவாசிப்போம்…!.

 

  • அனுபவ சுருக்கங்களில்
    ஆயிரமாயிரம் பாடங்கள் ….
    அனைத்தையும் கற்போம்…..
    அன்பு கொட்டி முதியோரை ஆராதிப்போம்…..

 

  • பிடித்தவர்களை மட்டும் நேசிப்பதற்குப் பெயர் அன்பு அல்ல;  எல்லோரையும் நேசிப்பது தான் உண்மையான அன்பு….!

 

  • பேருலகத்தை இயக்கும்
    பெண்மையைப் போற்றுவோம்….

 

  • என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதில் அல்ல; கற்ற வற்றில்   எவ்வளவு செயல் படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது  வாழ்வின் வெற்றி !

 

  • புதிதாக எதாவது சாதிப்பதற்கு உங்களைப் புதுப்பித்துக்   கொள்ள நினைத்தால் புத்தகங்களை வாசிப்பதே தலை   சிறந்த வழி!

 

  • ஒவ்வொன்றாய் விதைத்து….  ஒவ்வொன்றிலும் இயக்கி…. உள்ளுக்குள் இருந்து வழி நடத்தும் ஒவ்வோர் ஆசானையும் ஒவ்வொரு நாளும் வணங்குவோம்!

 

  • வாழ்வையே தவமாக்கி உலகம்
    வாழ்வதற்கு வரம் அருளும் பெண் குலம் வணக்கத்திற் குரியது எப்போதும்!

 

  • அனுபவக் களஞ்சியமாக நம்மோடு வாழும்
    அத்தனை பெரியவர்களையும் மதிப்போம் !
    அப்படிப் பட்டவர்களைக் கொண்டாடுவதைநம்
    அப்பா – அம்மாவிடம் இருந்து தொடங்குவோம்!

 

  • பள்ளி கல்லூரி…  வாழ்க்கை…  ஒவ்வொன்றிலும் எவ்வளவோ   கற்றுக் கொடுத்தவர்களின் நினைவுகள் எப்போதும் ஆழ்மனதில்… காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறோம் அந்த நல்ல உள்ளங்களுக்கு…!

 

  • ஒரே ஓர் அடி கூட அடிக்காமல் குழந்தையை உன்னதமாக வளர்க்க முடிந்தவர்களே நல்ல பெற்றோர்!

 

  • உன் பெற்றோரைக் கொண்டாடாமல் உலகில் எந்தக் கடவுளை வணங்கினாலும் ஒரு புண்ணியமும் இல்லை

 

  • நம்மை மேம்படுத்திக் கொள்வோம்! நம்மைச் சுற்றியிருப்பவர்களை மேம்படுத்துவோம்!  நமது ஊரை மேம்படுத்துவோம்!  நம் நாடு தானாக மேம்படும்!