மாயூர யுத்தம்

‘ஆயிரமானாலும் மாயூரமாகாது’ என்று புகழப்படும் மயிலாடுதுறையின் வளர்ச்சிக்காக சேவை அமைப்புகளுடன் சேர்ந்து கோமல் அன்பரசன் உருவாக்கிய மக்கள் இயக்கம்தான் ‘மாயூர யுத்தம்’. தொடர்ந்து பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்படும் மயிலாடுதுறை பகுதியின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே இதன் நோக்கம். அதில் முக்கியமாக வரலாற்று மற்றும் புவியியல் ரீதியாக எல்லாவிதமான தகுதியும் கொண்ட மயிலாடுதுறையைத் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருபவர். இதற்காக ‘மாயூர யுத்தம்’ மற்றும் ‘ ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?’ ஆகிய நூல்களை எழுதி அவற்றை ஆயுதமாக்கி களத்தில் இயங்கி வருகிறார்.

மாயூர யுத்தம் பற்றி மேலும் அறிய WW.MAYILADUTHURAIDISTRICT.COM