காவிரி

காவிரி தண்ணீர் குடித்து வளர்ந்த கோமல் அன்பரசன், தமிழ்நாட்டின் உயிர் நதியாக உள்ள அந்த ஆற்றின் மீது மட்டுமல்ல; காவிரி என்ற சொல்லின்மீதே தனி ஈர்ப்பு கொண்டவர்.   ‘காவிரி’ என்ற பெயரில் இவர் உருவாக்கிய அமைப்பில் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். காவிரியின் ஓர் அங்கமாக இவர் உருவாக்கிய காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பு (Kaviri Village Development Society ) மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனமாகும். அதன் வழியாக மாணவர் – இளைஞர், பெண்கள் நலன் சார்ந்த பணிகளும், சுகாதார தேவைகளுக்கான நற்பணிகளும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

இணைப்புக்கு: www.kaviri.org