நீ நினைத்ததை அடைய ஆசைப்பட்டால் முதலில் அவமானப்பட ஆசைப்படு! ஏனெனில் அதுதான் அத்தனை சாதனைகளுக்கும் அடித்தளம்!
வாசிப்பை நேசிப்பவர்களுக்கே உலகம் வசப்படும்….
வாசிப்போம் – புத்தகங்களைச் சுவாசிப்போம்…!.
அனுபவ சுருக்கங்களில்
ஆயிரமாயிரம் பாடங்கள் ….
அனைத்தையும் கற்போம்…..
அன்பு கொட்டி முதியோரை ஆராதிப்போம்…..
பிடித்தவர்களை மட்டும் நேசிப்பதற்குப் பெயர் அன்பு அல்ல; எல்லோரையும் நேசிப்பது தான் உண்மையான அன்பு….!
பேருலகத்தை இயக்கும்
பெண்மையைப் போற்றுவோம்….
என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதில் அல்ல; கற்ற வற்றில் எவ்வளவு செயல் படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றி !
புதிதாக எதாவது சாதிப்பதற்கு உங்களைப் புதுப்பித்துக் கொள்ள நினைத்தால் புத்தகங்களை வாசிப்பதே தலை சிறந்த வழி!
ஒவ்வொன்றாய் விதைத்து…. ஒவ்வொன்றிலும் இயக்கி…. உள்ளுக்குள் இருந்து வழி நடத்தும் ஒவ்வோர் ஆசானையும் ஒவ்வொரு நாளும் வணங்குவோம்!
வாழ்வையே தவமாக்கி உலகம்
வாழ்வதற்கு வரம் அருளும் பெண் குலம் வணக்கத்திற் குரியது எப்போதும்!
அனுபவக் களஞ்சியமாக நம்மோடு வாழும்
அத்தனை பெரியவர்களையும் மதிப்போம் !
அப்படிப் பட்டவர்களைக் கொண்டாடுவதைநம்
அப்பா – அம்மாவிடம் இருந்து தொடங்குவோம்!
பள்ளி கல்லூரி… வாழ்க்கை… ஒவ்வொன்றிலும் எவ்வளவோ கற்றுக் கொடுத்தவர்களின் நினைவுகள் எப்போதும் ஆழ்மனதில்… காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறோம் அந்த நல்ல உள்ளங்களுக்கு…!
ஒரே ஓர் அடி கூட அடிக்காமல் குழந்தையை உன்னதமாக வளர்க்க முடிந்தவர்களே நல்ல பெற்றோர்!
உன் பெற்றோரைக் கொண்டாடாமல் உலகில் எந்தக் கடவுளை வணங்கினாலும் ஒரு புண்ணியமும் இல்லை
நம்மை மேம்படுத்திக் கொள்வோம்! நம்மைச் சுற்றியிருப்பவர்களை மேம்படுத்துவோம்! நமது ஊரை மேம்படுத்துவோம்! நம் நாடு தானாக மேம்படும்!